×

சென்னை அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் செல்போனுக்கான கொரில்லா கண்ணாடி ஆலையை அமைக்கிறது அமெரிக்க நிறுவனம்..!!


சென்னை: சென்னை அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் செல்போனுக்கான கொரில்லா கண்ணாடி ஆலையை அமெரிக்க நிறுவனம் அமைக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் கொரில்லா கண்ணாடிகளை கோர்னிங் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. அமெரிக்காவின் கோர்னிங் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைக்காக்கத்தில் கொரில்லா கண்ணாடி ஆலையை அமைக்க உள்ளது. கோர்னிங் நிறுவனம் அமைக்க உள்ள செல்போன் கண்ணாடி ஆலையில் முதல்கட்டமாக 300 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கானாவில் ஆலையை கோர்னிங் அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை அந்நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்கள் ஏற்கனவே சென்னையில் ஆலைகளை அமைத்துள்ளன. ஃபாக்ஸ்கான், இந்நிலையில் பெகட்ரான் ஆலைகளுக்கு அருகே தன் ஆலையை அமைப்பது வசதியாக இருக்கும் என்பதால் கோர்னிங் நிறுவனம் சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது.

சென்னை அருகே கொரில்லா கண்ணாடி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் கோர்னிங் நிறுவனம் ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்போது கோர்னிங் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டுக்குள் உற்பத்தியை கோர்னிங் நிறுவனம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஆண்டுக்கு 3 கோடி கொரில்லா கண்ணாடிகளை தயாரிக்கும் வகையில் ஆலையை கோர்னிங் அமைக்க திட்டமிட்டுள்ளது.

The post சென்னை அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் செல்போனுக்கான கொரில்லா கண்ணாடி ஆலையை அமைக்கிறது அமெரிக்க நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,US ,Apple ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...