×

கோவை நகைக்கடை கொள்ளையன் சிக்கியது எப்படி?..300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பிடித்ததாக காவல்துறை ஆணையர் விளக்கம்!!

கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் விஜய் கைது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த மாதம் 28ம் தேதி நான்கரை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போலீசார் விசாரணையில், நகை கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (24) என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் ஐயப்ப பக்தர் போல மாலை அணிந்து வலம் வந்த விஜயை தனிப்படை போலீஸ் நேற்று சென்னையில் கைது செய்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ், “கொள்ளையன் விஜயை பிடிப்பது மிகுந்த சவாலாக இருந்தது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையன் விஜயை பிடித்துள்ளோம். கொள்ளையன் விஜயை கைது செய்த போது 700 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் இருந்து 5.15 கிலோ நகைகள் பறிமுதல் செய்தோம். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் வைர நகைகள் மட்டும் மீட்கப்படவில்லை. சென்னை கோயம்பேடு மொபைல் கடைகளில் சிம் கார்டு வாங்க கொள்ளையன் விஜய் முயற்சி செய்துள்ளார். ஐயப்ப பக்தர் போல மாலை அணிந்து வலம் வந்த விஜயை தனிப்படை போலீஸ் சென்னை கோயம்பேட்டில் நேற்று கைது செய்தது. கைதான விஜய் நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். நகைக்கடையில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் விஜய் செல்லவில்லை. மொபைல் கடையில் திருடவே சென்றுள்ளார். கோவை காந்திபுரத்தில் அன்றைய தினம் மொபைல் கடையில் பணி நடந்து வந்ததால் நகைக்கடையில் விஜய் கைவரிசை காட்டியுள்ளார். ‘என்று தெரிவித்தார்.

The post கோவை நகைக்கடை கொள்ளையன் சிக்கியது எப்படி?..300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பிடித்ததாக காவல்துறை ஆணையர் விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Deputy Commissioner ,Santhish ,Jose Alukas ,Vijay ,Dinakaran ,
× RELATED மது கடைகளை மூட உத்தரவு