×

கார்த்திகையின் சிறப்புகளும், பலன்களும்!

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிக அளவு மழைபொழியும் கார்காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் ‘கார்த்திகை’ எனப் பெயர் பெற்றது.8கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக் கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

*முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உண்டு. ஒன்று விசாக நட்சத்திரம் (வைகாசி மாதத்தில்), கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாகும்.

*கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கும், கார்த்திகைத் தீபத்திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபட்டால் அருள் கிடைக்கும்.

*கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் இரு வேளைகளிலும், ஆலயத்திலும் சென்று தீபம் ஏற்றுவது எல்லா மங்களங்களையும் வாழ்வையும் ஒளி மயமாக்கும்.

*கார்த்திகை பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதும், அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், இந்திரன், வாயு, வருணன், குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருப்பதாகவும், மகாவிஷ்ணு, மகாலட்சுமியுடன் வலம் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

*கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசிதேவியை மகாவிஷ்ணு மணந்ததாக புராணம் சொல்கிறது.

*கார்த்திகை மாத சோமவார திங்களில் திருக்குற்றாலத்தில் நீராடி குற்றால நாதரையும் அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

*கார்த்திகையில் திருவண்ணாமலையில் பெளர்ணமியன்று அர்த்தநாரீஸ்வரராக வெளியே வந்து தரிசனம் கொடுப்பார்.

*கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டவர் கார்த்திகை திருநாளில் அவல் பொரி, நெல்பொரியை படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

– எம். வசந்தா, சென்னை.

The post கார்த்திகையின் சிறப்புகளும், பலன்களும்! appeared first on Dinakaran.

Tags : Karthika ,Karthigai ,Kanthal ,
× RELATED பாஜவின் 10 ஆண்டு ஆட்சியில் நாடு எந்த...