×

“அட்டை பெட்டியில் குழந்தை; சுகாதாரத்துறையின் தவறு இல்லை”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையின் தந்தை தாமே இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார். இயற்கை முறை சிகிச்சை காரணமாகவே பச்சிளம் குழந்தை இறந்து பிறந்துள்ளது. தொடர்ந்து அந்த பெண்ணை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பிற்காக மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறையின் தவறு எதுவும் இல்லை.

குழந்தையின் தந்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதன் அடிப்படையில் குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பெண்ணை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் உயிரிழப்பிற்கு பணி சுமை காரணம் என கூறுவது தவறானது. மருத்துவரின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

The post “அட்டை பெட்டியில் குழந்தை; சுகாதாரத்துறையின் தவறு இல்லை”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,CHENNAI ,Killipakkam ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...