×

“விரும்பும்வரை வாழ்க”… திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை : நடிகர் ரஜினிகாந்திற்கு கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து கவிதை பாணியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், ட்விட்டரில் #Thalaivar170, #HBDSuperstarRajinikanth போன்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தமது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து கவிதையில்,

“தங்களுக்குத் தேவையான
ஏதோ ஒரு மின்னூட்டம்
உங்களிடம் உள்ளதாக
மக்கள் நம்புகிறார்கள்

அதை
மிக்க விலைகொடுத்துத்
தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

கலை என்ற பிம்பத்தைவிட
உங்கள்
நிஜவாழ்க்கையின் நேர்மைதான்
என்னை வசீகரிக்கிறது

எதையும் மறைத்ததில்லை
என்னிடம் நீங்கள்
பலம் பலவீனம்
பணம் பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்
அந்த நம்பிக்கையைக்
காப்பாற்றுவேன்

உடல் மனம் வயது கருதி
நீங்கள் எடுத்த அரசியல் முடிவு
உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும்
வாழ்க்கையெல்லாம்
வழிவகுக்கும்

வாழ்த்துகிறேன்

விரும்பும்வரை வாழ்க!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post “விரும்பும்வரை வாழ்க”… திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Vairamuthu ,Rajinikanth ,Chennai ,
× RELATED இளையராஜா பற்றி குற்றம் சொல்வதா?.. வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை