×

விஜயபுரம் ஊராட்சி சாலையோரம் தேங்கிகிடக்கும் குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

 

அறந்தாங்கி, டிச.12: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயபுரம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் குப்பைகளை அப்புறபடுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜயபுரம் ஊராட்சியில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே அனைத்து குப்பைகளும் கொட்டப்பட்டு உள்ளது. இந்த குப்பையில் கழிவுகளும் கொட்டப்படுவதால் பஸ் நிறுத்தம் அருகே துர்நாற்றம் வீசி வருதிறது.

தற்போது அறந்தாங்கி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த குப்பையில் தண்ணீர் நின்று கொசு உற்பத்தி ஆகி வருகிறது. இதனால் இந்த குப்பையில் இருந்து தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனே குப்பையை அப்புறபடுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post விஜயபுரம் ஊராட்சி சாலையோரம் தேங்கிகிடக்கும் குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vijayapuram Panchayat People ,Arantangi ,Vijayapuram Panchayat ,Arantangi Panchayat Union ,Pudukottai District ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...