×
Saravana Stores

கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி வாலீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

 

பெரம்பலூர்,டிச.12: பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 1008 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும், இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பிலும் உள்ள, கிபி 9ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நேற்று (11ம்தேதி) மாலை கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, 1008 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெற்றது.

சோமவார யாகபூஜையை தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் வாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பூஜைகளை கோயில் குருக்கள்கள் ஜெயச்சந்திரன், குமார், செல்லப்பா ஆகியோர் முன்னின்று நடத்தினர். பூஜைகளில் வாலி கண்டபுரம், மேட்டுப் பாளையம், சாத்தனவாடி, பிரம்மதேசம்,தேவையூர், தம்பை, வல்லாபுரம், சாலை, பெரம்பலூர், அ.குடிக்காடு, அனுக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர்.

The post கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி வாலீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : sangabhishekam ,Valeeswarar temple ,Karthikai ,Perambalur ,Valampuri Sangabhishekam ,Valikandapuram Valeeswarar Temple ,Karthika ,
× RELATED 50 லட்சம் பக்தர்களுக்கு தேவையான...