×

என்னை தாக்க சதி; கேரள கவர்னர் அலறல்

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ தொண்டர்கள் கருப்புக்கொடி காண்பித்து வருகின்றனர். நேற்றிரவு கவர்னர் ஆரிப் முகம்மது கான் விமான நிலையம் செல்வதற்காக கவர்னர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வழியில் எஸ்எப்ஐ தொண்டர்கள் அவருக்கு கருப்புக் கொடி காண்பித்தனர்.

அதைப் பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்துமாறு கவர்னர் கூறினார். காரிலிருந்து இறங்கிய அவர், கருப்புக்கொடி காண்பித்தவர்களை தன்னிடம் வருமாறு அழைத்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனடியாக போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். இதன்பின் நடுரோட்டிலேயே கவர்னர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்கு குண்டர்களின் ஆட்சி நடக்கிறது. என்னைத் தாக்குவதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் பினராயி விஜயன் உடந்தையாக இருக்கிறார். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்காது. முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இதேபோல போராட்டம் நடத்த முடியுமா? இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். விமான நிலையம் செல்லும் வழியில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் காரிலிருந்து இறங்கி ரோட்டில் வைத்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இவ்வாறு பேசியது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post என்னை தாக்க சதி; கேரள கவர்னர் அலறல் appeared first on Dinakaran.

Tags : Kerala Governor ,Thiruvananthapuram ,Kerala government ,governor ,Arif Mohammed Khan ,Kerala ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...