×

அறிவுசார் சொத்துரிமைக்கு காப்புரிமை கோரும் விண்ணப்பம் இந்தியாவில் 31% அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்

சென்னை: அறிவுசார் சொத்துரிமைக்கு காப்புரிமை கோரும் விண்ணப்பம் இந்தியாவில் 31% அதிகரித்துள்ளது. எந்த நாடும் இந்தளவிற்கு விண்ணப்பித்தது இல்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 2047 வளர்ச்சி அடைந்த பாரதம் தொலைநோக்கு பார்வைக்கான சிந்தனைகள் என்கிற இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதில் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அறிவுசார் சொத்துரிமை காப்புரிமை கோரும் விண்ணப்பம் இந்தியாவில் 31% அதிகரித்துள்ளது. எந்த நாடும் இந்தளவிற்கு விண்ணப்பித்தது இல்லை. ஆங்கிலத்தை காட்டிலும் தமிழ் சிறந்த மொழி. அறிவியலை பயிற்றுவிக்க தமிழ்மொழியே சிறந்தது. சொற்றொடர்களிலும், இலக்கண வளத்திலும், எந்த மொழியை விடவும் சிறந்தது தமிழ் மொழி. திருவள்ளுவருடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அறிவுசார் சொத்துரிமைக்கு காப்புரிமை கோரும் விண்ணப்பம் இந்தியாவில் 31% அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Governor R. N. Ravi ,Chennai ,Governor R. N. Ravi Info ,Dinakaran ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...