×

சூனாம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே 15 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

செய்யூர்: சூனாம்பேடு பேருந்து நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 15 கடைகள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் சூனாம்பேடு ஊராட்சி முதல்நிலை ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியையொட்டி இல்லீடு, காவனூர், அரசூர், ஈசூர், துறையூர், மாம்பாக்கம், மாம்பட்டு, எரவாநல்லூர், கடப்பேரி, வெண்பாலகரம், மணப்பாக்கம், வன்னியநல்லூர், கொளத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சூனாம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்தில் சென்றடைவர். இந்நிலையில், சூனாம்பேடு ஊராட்சியில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தை சுற்றி ஏராளமானோர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை கட்டி வியாபாரம் செய்து வந்தனர். இதனால், பேருந்துகள் வந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால், ஊராட்சி சார்பில், பேருந்து நிறுத்தத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 15 கடைகள் இடிக்கும் பணி இடிக்கும் பணி நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பொறியாளர் சங்கர், துணைத் தலைவர் விஜயா தேவசிகாமணி ஆகியோர் பார்வையிட்டனர். இதனால், அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.

 

The post சூனாம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே 15 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Soonambed ,Jaipur ,Chengalpattu District ,Sitamur Union ,Sunambed ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...