×

3 சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் : உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கேள்வி!!

டெல்லி : 3 சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கோவை சிக்கந்தர் உட்பட 3 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இது தொடர்பான கோப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோப்பு மீது ஆளுநர் ரவி எந்த முடிவெடுக்கப்படவில்லை.ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 3 சிறைவாசிகள் விடுதலை பரிந்துரை தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகள் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த உச்சநீதிமன்றம், 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை முன்னதாக விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய மனுவின் நிலை என்ன என்றும் 3 சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என்றும் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியது. அதோடு மனுக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் அளிக்க ஆளுநர் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

The post 3 சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் : உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கேள்வி!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...