×

புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர்-குஜராத் ஜெயன்ட்ஸ் பெங்களூரு-உபி.யோத்தா மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்தலைவாஸ் 38-48 என பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி முதல் பாதியில் 21-17 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் அரியானா டேக்கிள் புள்ளிகளை குவித்து பதிலடி கொடுத்தது.

இதில் அரியானா 18, டெல்லி 12 புள்ளி எடுத்தன. கடைசி நேரத்தில் டெல்லி சொதப்பியதால் 33-35 என்ற புள்ளி கணக்கில் அரியானா வெற்றி பெற்றது. அந்த அணியின் சித்தார்த் தேசாய் 10, டெல்லி கேப்டன் நவீன்குமார் 16 புள்ளி எடுத்தனர். அரியானா 3வது போட்டியில் 2வது வெற்றியும், டெல்லி 3வது போட்டியில் 2வது தோல்வியையும் சந்தித்தன. இன்று இரவு 8 மணிக்கு 18வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ், இரவு 9 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-உபி.யோத்தா மோதுகின்றன.

The post புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர்-குஜராத் ஜெயன்ட்ஸ் பெங்களூரு-உபி.யோத்தா மோதல் appeared first on Dinakaran.

Tags : Pro ,Kabaddi League ,Jaipur ,Gujarat Giants ,Bengaluru ,UP ,Yoda Clash ,10th Pro Kabaddi League ,Pro Kabaddi League ,Dinakaran ,
× RELATED பிரான்ஸ் பல்கலை.யில் இருந்து பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வெளியேற்றம்