×

ராகுல் குடும்பத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் மோடிக்கு ஆதரவாக இருக்கும் காங். தலைவர்கள்: சஞ்சய் ராவத் எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: ராகுல் குடும்பத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் மோடிக்கு ஆதரவாக சில காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் – சிவசேனா (உத்தவ் பிரிவு) ஒரே கூட்டணியில் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த கட்சியையும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து தனது கட்டுக்குள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சிப் பத்திரிகையில், அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், ‘ராகுல் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கும் சில காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஆதரவாக அரசியல் நடத்துகின்றனர்.

இவர்களின் செயலானது, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பிரசாரம் செய்த விதத்தை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். மோடியின் அரசியல் தந்திரம் மூன்று மாநிலங்களில் அக்கட்சிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. ஆனால், தெலங்கானாவில் பாஜகவால் எதையும் சாதிக்க முடியவில்லை. மத்திய பிரதேசத்தில் கூட தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது 199 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஆனால் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோதுதான் முடிவுகள் மாறின. காங்கிரஸ் கட்சியால் மோடியைத் தோற்கடிக்க முடியாது என்று பிரசாரம் செய்யப்படுவதும் ஒரு பொய்யான கருத்துதான். காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட், பூபேஷ் பகேல் ஆகியோர், வலுவான போட்டியை அளிக்காமல் இருந்ததால் தான் பாஜக வெற்றி பெற்றது’ என்று கூறியுள்ளார்.

The post ராகுல் குடும்பத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் மோடிக்கு ஆதரவாக இருக்கும் காங். தலைவர்கள்: சஞ்சய் ராவத் எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,Rahul ,Sanjay Rawat ,Mumbai ,Shiv Sena ,Sanjay ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…