×

மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளை முதல்வர் திறம்பட கையாண்டுள்ளார்: தமிமுன் அன்சாரி புகழாரம்

குத்தாலம்: மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளை முதல்வர் திறம்பட கையாண்டுள்ளார் என்று மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி கூறினார். மயிலாடுதுறை அடுத்த வானதிராஜபுரத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி: மிக்ஜாம் உள்ளிட்ட பெருவெள்ள காலங்களில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் ஒட்டுமொத்த சென்னை மக்களின் கோரிக்கையாக மழை பாதிப்பில் இருந்து நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்பதாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் வெள்ள பாதிப்பை திறம்பட கையாண்டுள்ளார்.

சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக மஜக சார்பில் அனைத்துக்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறோம். அந்த வகையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தோம். மற்றபடி இது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான சந்திப்பல்ல. ஈரோட்டில் வரும் 21ம் தேதி நடைபெறும் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் எந்த மத பாகுபாடின்றி ஒற்றுமையாக உள்ளோம். இதை வட இந்திய அரசியலை உள்வாங்கி கொண்ட பாஜக கெடுக்க நினைக்கிறது. பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பாராட்டுக்குரியது. நல்லதோ, கெட்டதோ தமிழகத்தை திமுக அல்லது அதிமுக தான் ஆட்சி செய்ய வேண்டும். அது தான் தமிழகத்துக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளை முதல்வர் திறம்பட கையாண்டுள்ளார்: தமிமுன் அன்சாரி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Migjam ,Tamimun Ansari ,Guttalam ,Human Democratic Party ,state ,general secretary ,Thamimun ,Mijjam ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...