×

மிக்ஜாம் புயல் பாதிப்பு!: சென்னையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6,000 மழை நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு..!!

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6,000 மழை நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வீட்டில் வைத்திருந்த மின்சாதன பொருட்கள், பர்னிச்சர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. மிக்ஜாம் புயலால் பலரது வீட்டில் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்த நிலையில் அதற்கான நிவாரணமாக ரூ 6 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.

இதற்காக ரேஷன் கடைகளில் இன்று முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வெள்ளம் பாதித்த மக்கள் ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால் அரசின் நிவாரணம் ரூ. 6000 கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6,000 மழை நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 16 லட்சம் பேர் இந்த தாலுக்காவில் உள்ளனர். அவர்களுக்கு முழுமையாக நிவாரண தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை நகரில் பாதிப்பு அதிகம் என்பதால் அனைத்து பகுதிகளுக்கும் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, மற்ற 3 மாவட்டங்களில் நிவாரண உதவித்தொகையை தாலுகா அளவில் வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு!: சென்னையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6,000 மழை நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...