×

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ் நாட்டுக்கு ரேகா நிதி பாக்கி ரூ 261.85 கோடி: சு.வெங்கடேசன் எம்பி தகவல்

சென்னை: ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ் நாட்டுக்கு ரேகா நிதி பாக்கி ரூ. 261.85 கோடி வரவேண்டியுள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் கிராமப் புற மேம்பாடு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இடம் கேள்வி எண் 427/05.12.2023 வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கூலி பாக்கியாக ஒன்றிய அரசு தர வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்டு இருந்தேன்.

மேலும் ஒன்றிய அரசு நிதி கிடைப்பதில் ஏற்படும் கால இடைவெளி என்ன என்றும் இத்தகைய இடைவெளிகள் இந்த வேலைத் திட்டம் நோக்கி வரும் கிராமப்புற உழைப்பாளிகளின் வாக்கத்தைப் பாதிக்காதா என்றும் கேட்டு இருந்தேன். இதற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர், நவம்பர் 29, 2023 அன்றைய கணக்கின்படி கூலிக்கான ஒன்றிய அரசின் நிதிபாக்கி ரூ. 261.85 கோடி என தெரிவித்துள்ளார். ஆனால் இத்தகைய நிதி அளிப்பில் உள்ள கால இடைவெளி பற்றி தெளிவான பதில் தரவில்லை.

மாறாக இரண்டு முறை, முறைக்கு ஒன்றோ, இரண்டோ தவணைகளில் நிதி அளிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். நிதி அளிப்பில் உள்ள இடைவெளி கிராமப்புற உழைப்பாளிகளின் ஊக்கத்தைப் பாதிக்காதா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைச்சர் கடந்து சென்றுள்ளார். ஆனால் இத்தகைய நிதி வரத்தில் உள்ள தாமதம், வேலை கோரல்களில் சரிவை உருவாக்கி உள்ளது என்று நிறைய செய்திகளும் தரவுகளும் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கான நிதி பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ் நாட்டுக்கு ரேகா நிதி பாக்கி ரூ 261.85 கோடி: சு.வெங்கடேசன் எம்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Su Venkatesan ,CHENNAI ,Tamil ,Nadu ,Su.Venkatesan ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...