×

தண்ணீரை காய்ச்சி குடிங்க

 

ஆண்டிபட்டி, டிச. 11: தேனி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பருவநிலை மாறுபாட்டின் காரணமாக தேனி மாவட்டத்தில் ஏராளமானோருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘காய்ச்சலை தடுக்க சுடு தண்ணீரை பருக வேண்டும். ஆறிய மற்றும் பழைய உணவு வகைகளை உட்கொள்ளக்கூடாது. சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்’’ இவ்வாறு கூறினர்.

The post தண்ணீரை காய்ச்சி குடிங்க appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Theni ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி