×

கெஜ்ரிவால், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர் பஞ்சாபில் வீடு தேடி 43 அரசு சேவைகள்

லூதியானா: பஞ்சாபில் வீடு தேடி 43 அரசு சேவைகளை வழங்கும் மக்கள் நலத்திட்டத்தை கெஜ்ரிவாலும் அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மானும் தொடங்கி வைத்தனர். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பிறப்பு, இறப்பு, திருமணம், வருமானம், வசிப்பிடம், சாதி, ஓய்வூதியம், மின் கட்டணம் செலுத்துதல், நில வரையறை உள்ளிட்டவற்றுக்கான சான்றிதழ்களை வீடு தேடி வழங்கும் மக்கள் நலத்திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

இதனை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து பேசிய கெஜ்ரிவால், “இன்றைய தினம் பஞ்சாபிற்கு மட்டும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் அல்ல. மாறாக இந்தியா முழுவதுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பஞ்சாபில் தொடங்கப்படும் இத்திட்டம் புரட்சிகரமானது. இதுவொரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். சான்றிதழ்களுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இதன் மூலம் 43 அரசு சேவைகளை மக்கள் தங்களது வீடுகளிலேயே பெற்று கொள்ளலாம்,” என்று தெரிவித்தார். இத்திட்டத்தை கெஜ்ரிவால் அரசு டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. தற்போது பஞ்சாபிலும் தொடங்கப்பட்டுள்ளது.

The post கெஜ்ரிவால், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர் பஞ்சாபில் வீடு தேடி 43 அரசு சேவைகள் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Bhagwant Mann ,Punjab ,Ludhiana ,Chief Minister ,Bhagwant Singh ,
× RELATED திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப்...