×

கழிவறை ேகாப்பையில் வீசிய கல் மாணவனை எடுக்க வைத்த ஹெச்.எம்: வன்ெகாடுமை வழக்குப்பதிவு

நெல்லை: நெல்லை மாவட்டம், மானூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இந்த மாணவன் பள்ளியில் மாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் வீசி விளையாடிய கல் ஒன்று பள்ளி கழிவறை கோப்பையினுள் விழுந்து விட்டது. இதுகுறித்து தெரியவந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பொன்ராணி (56), மாணவனின் ஜாதி பெயரை குறிப்பிட்டு அழைத்து, கழிவறை கோப்பையில் விழுந்த கல்லை எடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

தலைமை ஆசிரியரே கூறியதால் அந்த கழிவறை கோப்பையிலிருந்து அந்த மாணவர் கையால் கல்லை எடுத்து வெளியே போட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவர், தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் முத்துலெட்சுமி இதுகுறித்து மானூர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து மானூர் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

The post கழிவறை ேகாப்பையில் வீசிய கல் மாணவனை எடுக்க வைத்த ஹெச்.எம்: வன்ெகாடுமை வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : HM ,Vanegadumai ,Nellai ,Manur Panchayat Union Primary School ,Nellai district ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...