×

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தண்டவாளத்திற்குள் தவறி விழுந்த பெண்: காப்பாற்றிய ஆர்.பி.எப்.,வீரருக்கு பாராட்டு

சேலம்: கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து, கேரள மாநிலம் கண்ணூருக்கு சேலம் வழியே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (16527) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று அதிகாலை 1 மணிக்கு, சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் வந்து நின்று 3 நிமிடத்தில் மீண்டும் புறப்பட்டது. அப்போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள், ஓடிச்சென்று ரயிலில் ஏறினர். ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது, ஒரு பெட்டியில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறிய நிலையில், ஒரு பெண் திடீரென படிக்கட்டில் கால் தவறி, பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே தண்டவாளத்திற்குள் விழுந்தார். அந்த நேரத்தில், பிளாட்பாரத்தில் நின்றிருந்த சேலம் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) வீரர் அஜித், ஓடிச்சென்று தண்டவாளத்திற்குள் விழுந்த பெண்ணை வெளியே இழுத்து காப்பாற்றினார்.

விசாரணையில், அந்த பெண் கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் காயத்ரிகோயில் பகுதியை சேர்ந்த ஸ்மிருதி (26) என்பதும், யஷ்வந்த்பூரில் இருந்து கோழிக்கோடு செல்வதற்காக ரயலில் பயணித்ததும், சேலத்தில் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்ததும் தெரியவந்தது. அவரது இடது காலில் லேசான காயம் ஏற்பட்டிருந்ததால், ரயில்வே ஸ்டேஷனில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அடுத்து வந்த ரயிலில் ஸ்மிருதி மற்றும் உடன் வந்த 2 பேரை கோழிக்கோட்டிற்கு ஆர்பிஎப் போலீசார் அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்பிஎப் போலீஸ்காரர் அஜித்தை ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.

 

The post ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தண்டவாளத்திற்குள் தவறி விழுந்த பெண்: காப்பாற்றிய ஆர்.பி.எப்.,வீரருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : RPF ,Salem ,Yashwantpur ,Karnataka ,Kannur ,Kerala ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...