×

ரூ.32,000 சம்பளத்தில் குவைத்தில் வீட்டு வேலை பெண் பணியாளர்களை பணியமர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் தகவல்

சென்னை: தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: குவைத் நாட்டின் குவைத் கேட் பவுன்டேசன் என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வீட்டுப்பெண் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி வீட்டு பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.32,000. அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29,500 வழங்கப்படும். வயது வரம்பு 30 முதல் 40 வரை. மேலும் மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி, இதர சலுகை குவைத் நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் இரண்டு வருடம் வரை நீடிக்கும். இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அல்லது  மாவட்ட வேலைவாய்ப்பு துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை அணுகலாம். எனவே குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி  மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம். வேலைக்கான விவரங்களை இந்நிறுவனத்தின் வலைதளம் www.omcmanpower.com மூலமாகவும் இந்நிறுவன தொலைபேசி எண்கள் 044-22505886/044-22500417 மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது 17.11.2023 வரை நடைமுறையில் இருக்கும். விருப்பமுள்ள மனுதாரர்கள்  இக்காலகட்டத்திற்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முதலில் பதிவு செய்யும் நபர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ரூ.32,000 சம்பளத்தில் குவைத்தில் வீட்டு வேலை பெண் பணியாளர்களை பணியமர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Foreign Employment Institute of Tamil Nadu Government ,Chennai ,Foreign Nadu Employment Agency ,Government of Tamil Nadu ,Maheeswaran ,Foreign Employment Institute of the Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...