×

ஒரு நாள் கிரிக்கெட்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.

பென் டெக்கெட் பொறுப்புடன் ஆடி 71 ரன்னில் அவுட்டானார். லிவிங்ஸ்டன் 45 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ். முறைப்படி 34 ஓவரில் 188 ரன்கள் எடுக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆலிக்அதான்சே 45 ரன்னில் அவுட்டானார். கெய்சி கார்டி சிறப்பாக ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் அதிரடியில் இறங்கிய ரொமாரியோ ஷெப்பர்டு 28 பந்தில் 43 ரன் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதனால் 31.4 ஓவரில் 6 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டேவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வாகினர். இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.

2 ஆண்டுக்கு பின் டி.20 அணியில் ரஸ்சல்
அடுத்ததாக இரு அணிகளும் 5 டி.20 போட்டிகளில் மோத உள்ளன. இதில் முதல் போட்டி வரும் 13ம்தேதி நடக்கிறது. டி.20 தொடருக்கான வெ.இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோவ்மன் பவல் தலைமையிலான அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்சல் இடம்பெற்றுள்ளார். 2 ஆண்டுக்கு பின் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக 2021ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஒரு நாள் கிரிக்கெட்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Tags : West Indies ,England ,Bridgetown ,Dinakaran ,
× RELATED உலகக்கோப்பையில் ஓமனுக்கு எதிராக சூப்பர் ஓவரில் நமீபியா வெற்றி