×

தெ.ஆ.வுடன் இன்று முதல் டி.20 போட்டி; கேப்டனாக மகிழ்ச்சியாக செயல்படுகிறேன்

டர்பன்:இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்டில் ஆடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி டர்பனில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “உலகக் கோப்பை தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

அதிலிருந்து நாங்கள் நகர்வது கடினமாக இருந்தது. டி20 தொடராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி பெரிய பூஸ்ட் கொடுத்தது. அந்த தொடரில் அனைத்து வீரர்களும் ஒன்றாக கைகோர்த்து பயமற்ற கிரிக்கெட்டை விளையாடினர். அதே ஆட்டத்தை தற்போது தென்ஆப்ரிக்காவுக்கு எதிராகவும் விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுவீர்களோ அதே போல் இத்தொடரிலும் விளையாடுங்கள் என்று இளம் வீரர்களிடம் கூறியுள்ளேன். கேப்டனாக செயல்படுவதை தற்போது நான் மகிழ்ச்சியாக செய்கிறேன்.

உலக கோப்பைக்கு முன் குறைந்த சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் ஐபிஎல் தொடர் இருக்கிறது. எங்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 14 போட்டி விளையாடுவார்கள். மேலும் அவர்களுக்கு நிறைய விளையாடிய அனுபவம் இருக்கிறது. இதனால் இந்த விஷயம் சிக்கலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களுடைய பங்கு என்னவென்று மிக நன்றாக தெரியும். இந்தியாவை விட தென்ஆப்ரிக்க ஆடுகளங்களில் வேறு மாதிரியாக இருக்கும். இங்கும் இளம்வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன், என்றார்.

தென்ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில், டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு நிறைய கிரிக்கெட் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரே அணியாக சேர்ந்து விளையாடுவதற்கு சர்வதேச போட்டிகள் நிறைய இல்லை. நாங்கள் ஒரே குழுவாக விளையாட விரும்புகிறோம் என்பதை புதிய வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் அணிக்கு வரும்போது ஒரே பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வசதியாக இருக்கும், என்றார்.

The post தெ.ஆ.வுடன் இன்று முதல் டி.20 போட்டி; கேப்டனாக மகிழ்ச்சியாக செயல்படுகிறேன் appeared first on Dinakaran.

Tags : T20 match ,TEA ,Durban ,cricket ,South Africa ,T20I ,Dinakaran ,
× RELATED அதிமுகவால் சிங்கிள் டீ கூட வாங்கித்தர முடியாது: ராதிகா பங்கம்