×

மணலியில் ரசாயன குடோனில் 2 வது நாளாக பற்றி எரியும் தீ: மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல்

திருவொற்றியூர்: சென்னை மணலி ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சுமார் 1 கோடி மதிப்பு மூலப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தெரிகிறது. குடோனில் இருந்து வெளியேறிய புகை திருவொற்றியூர், மணலி மற்றும் மணலி புதுநகர் உள்பட சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மணலி, எண்ணூர், மாதவரம் பகுதியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் வந் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் மற்றும் எளிதில் தீணை அணைக்கும் திரவங்களை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரத்துக்கு மேலாகியும் தீயை அணைக்க வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இன்று 2வது நாளாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரசாயன புகை அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இது பொதுமக்களை அச்சம் அடைய செய்துள்ளது.

The post மணலியில் ரசாயன குடோனில் 2 வது நாளாக பற்றி எரியும் தீ: மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Kudon ,Chennai ,Manali Andarkupam ,Sandi ,
× RELATED ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு