×

டூவீலர் மீது கார் மோதியதில் முதியவர் பலி

 

நத்தம்,டிச. 10: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே எல். வலையபட்டியை சேர்ந்தவர் ராசு(70). இவர் நேற்று எல்.வலையப்பட்டியில் இருந்து லிங்கவாடிக்கு டூவீலரில் சென்றார். நத்தம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லிங்கவாடி பிரிவு அருகே சென்ற போது நத்தத்திலிருந்து இருந்து மதுரை நோக்கி வந்த கார் ராசு ஓட்டி வந்த இருசக்கரம் வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post டூவீலர் மீது கார் மோதியதில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Natham ,Nutham, Dindigul District ,Rasu ,Velayapatti ,L. Valayapatti ,Dinakaran ,
× RELATED நத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு