×

முதல்வரின் சீரிய நடவடிக்கையால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

சென்னை: முதல்வரின் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள 44வது வார்டு, முனியப்பன் தெருவில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: 47 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் மழை பெய்தாலும் முதல்வரின் தலைமையிலான அரசு மேற்கொண்ட சீரிய முயற்சி காரணமாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டதன் கரணமாகவும் பாதிப்பிலிருந்து இன்றைக்கு மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அந்த ஓரிரு நாட்கள் நீர்த்தேக்கம் ஏற்பட்டதன் காரணம், மிக்ஜாம் புயலின் காரணமாக கடல் சீற்றம் அடைந்து பெரும் கடல் அலைகள் உருவானதன் காரணமாக, நகரத்திலிருந்து கடலுக்குச் செல்லும் நீர் கடலில் கலக்க சற்று தாமதமானது. பிறகு புயல் கரையை கடந்த பின்பு கடல் சீற்றம் குறைந்து நீர் கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது. சென்னையின் பல பகுதிகள் இப்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும், இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 7 வட்டங்களிலும் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உதவி பொருட்கள் வழங்க இருக்கின்றோம். இந்த நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வரின் சீரிய நடவடிக்கையால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,KR Periyakaruppan ,CHENNAI ,Chief Minister ,Perampur, Chennai ,K.R.Periyagaruppan ,
× RELATED காரைக்குடியில் என்என்எல் டிரைவ்...