×

முகமது ஷமி சுயமாக கற்று கொண்டுள்ளார்: பயிற்சியாளர் பாராட்டு

டர்பன்: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே அளித்துள்ள பேட்டி: “முகமதுஷமி போன்ற ஒரு பவுலரை, ஒரு பயிற்சியாளரால் உருவாக்க முடியும் என்று நான் சொன்னால், நான் சொல்வது பொய். பந்தின் சீம் பகுதியை பிடித்து எந்த அசைவும் இல்லாமல் அதனை பிட்ச் செய்ய முகமது ஷமியால் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் முடியும். இந்த திறமையை முகமது ஷமி சுயமாக கற்று கொண்டுள்ளார். அதற்காக அவர் ஏராளமான உழைப்பை கொடுத்துள்ளார்.

பும்ராவும் தனது அரிய பந்துவீச்சு ஆக்சன் திறமையால் பந்தை உள்ளே வெளியே என்று நகரத்த செய்கிறார். இது ஒரு கலை. இந்த கலையை கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கச்சிதமானதாக மாற்றுகிறது. எங்களிடம் ஆரம்பத்தில் பும்ரா, சமி, இஷாந்த் சர்மா மூன்று பேர் இருந்தார்கள். இந்த வகையான மேஜிக்கை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். உண்மையில் இவர்கள் இந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவோ கனவில் நினைக்கவும் கூட இல்லை, என்றார்.

The post முகமது ஷமி சுயமாக கற்று கொண்டுள்ளார்: பயிற்சியாளர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Mohammed Shami ,Durban ,Paras Mambre ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்!