×

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபார ஆட்டம்; யு.19 அணியின் சூப்பர் ஆல்ரவுண்டர் அர்ஷின் குல்கர்னி: குட்டி ஹர்திக் பாண்டியாவாக உருவாகிறார்

துபாய்: 8 அணிகளுக்கு இடையிலான யு19 ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் ஜத்ரான் – தராகில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 25 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் லிம்பானி வீசிய பந்தில் தராகில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 2வது விக்கெட்டுக்கு ஜத்ரான் – சோஹில் இருவரும் சேர்ந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில், சோஹில் கான் 12 ரன்களில் வெளியேறினார். அதன்பின் சிறப்பாக ஆடிய ஜத்ரான் 43 ரன்காளில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியாக 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 173 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நமன் திவாரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் ஆதர்ஷ் சிங் – அர்ஷின் குல்கர்னி ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் 14 ரன்களிலும், தொடர்ந்து வந்த ருத்ர படேல் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் அர்ஷின் குல்கர்னி – கேப்டன் சஹரன் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஹரன் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அர்ஷின் – முஷீர் கான் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அர்ஷின் குல்கர்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முஷீர் கான் 48 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தியாவில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் குறைவாக இருக்கும் சூழலில், இந்திய யு19 அணியின் அர்ஷின் குல்கர்னி குட்டி, ஹர்திக் பாண்டியாவாக உருவாகி வருகிறார். இதனால் இவரின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபார ஆட்டம்; யு.19 அணியின் சூப்பர் ஆல்ரவுண்டர் அர்ஷின் குல்கர்னி: குட்டி ஹர்திக் பாண்டியாவாக உருவாகிறார் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Arshin Kulkarni ,U19 ,Hardik Pandya ,Dubai ,U19 Asia Cup ,United Arab Emirates ,U.19 ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி