×

மிக்ஜாம் புயல் நிவாரணம்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி..!!

சென்னை: மிக்ஜாம் புயல் மழை நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மழை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டதால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இந்தச் சூழ்நிலையில், நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், மிக்ஜாம் புயல் மழை நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலையை அசோக் லேலண்ட் நிறுவன மேலாண் இயக்குநர் வழங்கினார். மேலும், பி.எஸ்.ஜி. குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நிதியை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

The post மிக்ஜாம் புயல் நிவாரணம்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி..!! appeared first on Dinakaran.

Tags : Ashok Leyland ,CHENNAI ,Migjam ,Dinakaran ,
× RELATED செக் மோசடி வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை