×

ஐ.நா. கொண்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவு தீர்மானம்: அமெரிக்கா நிராகரிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை. பாலஸ்தீனம் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே போரால் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. 2 மாதமாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக காசாவில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்தன. இதையடுத்து ஐக்கிய நாடுகள் அவையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்தார். அதில் காசாவில் போர் நிறுத்திருக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. ஹமாஸ்-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.

ஹாமஸ் அமைப்பிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில் இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஐநாவுக்கான அமெரிக்காவின் தூதர் ராபர்ட் ஆட் போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும் ஏனென்றால் நீண்ட அமைதிக்கும் பிற நாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுவரை இப்போரில் காசாவில் 16,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 42,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post ஐ.நா. கொண்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவு தீர்மானம்: அமெரிக்கா நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : UN ,Washington ,Israel ,Hamas ,US ,Dinakaran ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...