×

வேதாளை அருகே கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர்: மணல் மேவி பாதை அமைக்க கோரிக்கை

 

மண்டபம், டிச. 9: வேதாளை அருகே கால்நடை மருத்துவமனையை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ஆடுகள், மாடுகள் மருத்துமனைக்கு மருத்துவ சிகிச்சை செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி உட்பட்ட பகுதியில் இடையர்வலசை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பகுதியில் ராமநாதபுரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது.

இந்த நிலையில் மண்டபம் பேரூராட்சி மரைக்காயர் பட்டிணம் மற்றும் வேதாளையும் மற்றும் சாத்த கோன்வலசை ஊராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் ஆடு வளர்ப்பது மாடு வளர்ப்பது மற்றும் கோழிகள் மற்றும் உட்பட கால்நடை பிராணிகள் வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். மழைக்காலங்களிலும் அதிகமான வெப்பநிலை காலங்களிலும் ஆடுகள் மாடுகள் மற்றும் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் உட்பட கால்நடை பிராணிகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கும் மற்றும் சாதரண நாட்களில் வரும் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு இந்த கால்நடை மருத்துமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த கால்நடை மருத்துவமனை சுற்றியும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கால்நடை பிராணிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றன. ஆதலால் கால்நடைமருத்துவ மனையை சுற்றியுள்ள மழை நீரில் மணல்மேவி பாதை அமைக்க இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேதாளை அருகே கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர்: மணல் மேவி பாதை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vedalai ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் அருகே காரில் பதுக்கி...