×

தொண்டி அருகே அதிக ஒளித்திறன் மூலம் மீன் பிடித்த படகு பறிமுதல்: மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி

 

தொண்டி, டிச. 9: தொண்டி அருகே, அதிக ஒளித்திறன் கொண்ட லைட் மூலம் மீன்பிடித்த படகை மீனவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலில் மீன் இனம் அழிவதை தடுக்க இரட்டை மடி, சுருக்குமடி, அதிக ஒளித்திறன் கொண்ட போக்கஸ் லைட் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கடல் பகுதியில் சோலியக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆறுமுகம் உள்ளிட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடிப்பதாக நம்புதாளை மீனவர் சங்க தலைவர் சத்தியேந்திரன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

கடல் அமலாக்கத்துறை ஆய்வாளர் குருநாதன், மீன்வள ஆய்வாளர் அபுதாஹிர், மேற்பார்வையாளர் கணேஷ்குமார், காவலர் காதர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, கடலில் மீன்பிடித்த பதிவு செய்யப்படாத படகு என்பதும், அதிக ஒளித்திறன் மூலம் மீன்பிடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து படகு, இன்ஜின், லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தொண்டி அருகே அதிக ஒளித்திறன் மூலம் மீன் பிடித்த படகு பறிமுதல்: மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Thondi ,Fisheries ,Dondi ,Fisheries Department ,
× RELATED மீன் வளத்துறை சார்பில் 11 படகுகள் மீது நடவடிக்கை