×

பிரான்மலைக்கு செல்லும் குறுகிய சாலையால் வாகனஓட்டிகள் அவதி: அகலப்படுத்த கோரிக்கை

 

சிங்கம்புணரி, டிச.9: சிங்கம்புணரி அருகே பாரி ஆண்ட பரம்பு மலை என்னும் பிரான்மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. 2500 அடி உயரமுள்ள இம்மலை அடிவாரத்தில் மங்கை பாகர் தேனம்மை கோயிலும், மலை உச்சியில் பாலமுருகன் கோயிலும், தர்காவும், குறிஞ்சி பூக்கள், மலைத்தேன் நிறைந்த பகுதியாக பிரான்மலை உள்ளது. இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் சிங்கம்புணரியில் இருந்து கிருங்காக்கோட்டை வழியாக பிரான்மலை செல்லும் சாலை இரண்டு பேருந்துகள் செல்லும் வகையில் இருவழி சாலையாக உள்ளது.

ஆனால் சிங்கம்புணரியில் இருந்து வேங்கைப்பட்டி வழியாக செல்லும் சாலை ஒரு பேருந்து செல்லும் அகலத்திற்கு மட்டுமே உள்ளது. பிரான்மலைக்கு கிருங்காக்கோட்டை வழியாக செல்லும் தூரத்தை விட வேங்கைப்பட்டி வழியாக செல்லும் தூரம் குறைவாக உள்ளது. சாலை அகலம் காரணமாக கிருங்காக்கோட்டை வழியாக அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இதனால் வேங்கைப்பட்டி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல் பிரான்மலையில் இருந்து மேலப்பட்டி செல்லும் சாலையும் குறுகலாக உள்ளது. இச்சாலையையும் அகலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை குறுகலாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட முடியாமல் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆகியோர் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர், எனவே சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிரான்மலைக்கு செல்லும் குறுகிய சாலையால் வாகனஓட்டிகள் அவதி: அகலப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Branmalai ,Singampunari ,Pranamalai Parambu Malai ,Pranmalai ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரிவிழா