×

மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் பலி

வேளச்சேரி: மேடவாக்கம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (80). சொந்தமாக மாடுகளை வைத்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று காலை வழக்கம் போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து நீரில் விழுந்து கிடந்துள்ளது. இதில், மாடுகள் இறங்கியபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. அதிர்ஷ்டவசமாக கேசவன் உயிர் தப்பினார். தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர், அங்கு விரைந்து சென்று, மின் ஊழியர் உதவியுடன், மின்சாரத்தை துண்டித்து, பொக்லைன் இயந்திரம் மூலம், மாடுகளை அப்புறப்படுத்தினர். பின்னர், அங்கு வந்த மேடவாக்கம் கால்நடை மருத்துவர் மைதிலி, மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….

The post மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kesavan ,Bhajanai Koil Street, Medavakkam ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே குரூப்-1 தேர்வில்...