×

குரும்பலூரில் 21 பள்ளிகளை சேர்ந்த மேலாண்மை குழுவினர் 105 பேருக்கு பயிற்சி

 

பெரம்பலூர்,டிச.9: குரும்பலூரில் 21 பள்ளிகளைச் சேர்ந்த மேலாண்மை குழுவினர் 105 பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் பெரம்பலூர் ஒன்றியம், குரும்பலூர் மற்றும் அம்மாப்பாளையம் குறுவள மையங்களுக்கு உட்பட்ட 21 பள்ளிகளை சேர்ந்த ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பிரிதிநிதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், கல்வியாளர் என பள்ளிக்கு 5 பேர்கள் வீதம் மேலாண்மை குழுவை சேர்ந்த 105 பேர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி, குரும்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

பயிற்சிக்கு குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். குரும் பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜார்ஜ், அம்மாபா ளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமராஜு, பெரம் பலூர் வட்டாரக் கல்வி அலுவலர் அருண் குமார் ஆகியோர் பயிற்சியில் பங்கேற்ற மேலாண்மைக் குழுவினருக்கு பயிற்சி யின் நன்மை, அவசியம் குறித்து விளக்கிப் பேசினர்.  ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன் குழந்தைக ளின் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், பள்ளி மேம்பாட் டுத் திட்டம் போன்றவற்றை எடுத்துக்கூறி பயிற்சி அளித்தார்.

The post குரும்பலூரில் 21 பள்ளிகளை சேர்ந்த மேலாண்மை குழுவினர் 105 பேருக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kurumblur ,PERAMBALUR ,KURUMBALUR ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...