×
Saravana Stores

ஆலங்காடு கிராமத்தில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்து செயல் விளக்கம்

 

முத்துப்பேட்டை, டிச. 9: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் இம்மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் லட்சுமி காந்தன், மத்திய திட்டம் விஜயலட்சுமி ஆகியோரின் ஆணைப்படி முத்துப்பேட்டை வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் இளம்பூரணார் அறிவுறுத்தலின்படி கால்நடைகளுக்கு நோய்தடுப்பு குறித்த செயல்விளக்க முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் குடல் புழு நீக்குதல், ஊட்டச்சத்து மருந்து கோமாரி நோய் தடுப்பூசி போன்றவற்றை செயல் விளக்கத்தின் மூலம் முத்துப்பேட்டை வட்டார மூத்த கால்நடை மருத்துவர் மகேந்திரன் செய்து காட்டினர். தொடர்ந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், கால்நடை உதவியாளர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செயல் விளக்கத்தின் போது முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர். ஆலங்காடு கிராம விவசாயிகள் கால்நடைகளுடன் கலந்து கொண்டனர்.

The post ஆலங்காடு கிராமத்தில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்து செயல் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Alangadu village ,Muthuppet ,Agriculture Technology Management Agency ,Atma ,Alangadu ,
× RELATED முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி விவசாயி படுகாயம்