×

மபி, சட்டீஸ்கரில் தோற்றது ஏன்? கார்கே, ராகுல் தலைமையில் ஆய்வு

புதுடெல்லி: மபி, சட்டீஸ்கர் தேர்தலில் தோற்றது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் ஆய்வுக்கூட்டம் கார்கே தலைலையில் நடந்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரிதும் எதிர்பார்த்த மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. இங்கு எப்படி காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பது பற்றி நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன காா்கே தலைமையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக சட்டீஸ்கர், மபி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், காங்கிரஸ் பார்வையாளர் அஜய் மாக்கன், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், முன்னாள் துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ, முன்னாள் அமைச்சர்கள் தாம்ரத்வாஜ் சாஹு மற்றும் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குமாரி செல்ஜா தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்தார். மத்தியப் பிரதேச ஆய்வுக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மபி மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், வேட்பாளர் தேர்வு கமிட்டித் தலைவர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post மபி, சட்டீஸ்கரில் தோற்றது ஏன்? கார்கே, ராகுல் தலைமையில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mabi ,Chhattisgarh ,Kharge ,Rahul ,New Delhi ,Congress ,
× RELATED மோடி இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால்...