×

வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சேலம் அருகே பரபரப்பு

சேலம்: சேலம் அருகே வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்த 23 வயது கொண்ட இளம்பெண், கடந்த 3 நாட்களுக்கு முன் தனது வீட்டில் 2 வயது பெண் குழந்தையுடன் இருந்துள்ளார். அவரது கணவர், வெளியில் கூலி வேலைக்கு சென்றிருந்தார். மதிய வேளையில் இளம்பெண் இருந்த வீட்டிற்குள் சீரங்கனூரை சேர்ந்த இருசாகவுண்டன் (25) என்ற வாலிபர் புகுந்துள்ளார்.

அவர் திடீரென கத்தியை எடுத்து இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுபற்றி தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார். பிறகு நங்கவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இருசாகவுண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சேலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்