×

சென்னையில் டிச.26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடைபெறும்: பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் டிசம்பர் 26ல் நடைபெறுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். அந்த அடிப்படையில், ஏற்கனவே ஒருமுறை அதிமுக செயற்குழு நடந்து முடிந்த நிலையில், தற்போது டிசம்பர் 26ம் தேதியன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்பு, சட்டரீதியாக அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட பின்பு நடைபெறக்கூடிய முதல் பொதுக்குழு இதுவாகும். பல்வேறு விதமான தீர்மானங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது.

The post சென்னையில் டிச.26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடைபெறும்: பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Executive Committee and General Committee ,Chennai ,General Secretary ,Eadapadi Palanisamy ,Edapadi Palanisami ,General Assembly ,Executive Committee ,Electoral Commission ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்