×

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா பதவி பறிப்பு: அதானி பற்றி கேள்விகேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஒன்றிய அரசு நடவடிக்கை

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தது. நாடாளுமன்ற நன்னடத்தை குழு இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த மாதம் விசாரணை குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகுவா மொய்த்ராவை பதவி நீக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா தனது தரப்பை விளக்கப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்.பி.பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மகுவா மொய்த்ராவை எம்.பி.பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எம்.பி. மகுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது

The post திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா பதவி பறிப்பு: அதானி பற்றி கேள்விகேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Magua Moitra ,Union government ,Adani ,Delhi ,Hiranandani ,Parliament ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...