×

அம்பத்தூர், கொரட்டூரில் மழைநீர் வடிவதில் தாமதம்: 4 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்.. இயல்பு வாழ்க்கை திரும்புவதில் சுணக்கம்..!!

சென்னை: சென்னை அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் பகுதிகளில் மழைநீர் மெதுவாக வடிந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் அடுத்த அய்யம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் பட்டரவாக்கத்தில் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ளது. கொரட்டூரில் சுரங்கப்பாதையை மூழ்கடிக்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. பிரதான சாலைகளில் வெள்ளம் வடிந்தாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகவும், கடந்த 4 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருவதாகவும், அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனிடையே அனைத்து வார்டுகளிலும் 72 பம்ப்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து பணிகளில் முடிவடைந்துவிடும் என்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தெரிவித்தார். வரலாறு காணாத இந்த மழையால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் அப்பகுதியினர், அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்பத்தூர், கொரட்டூரில் மழைநீர் வடிவதில் தாமதம்: 4 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்.. இயல்பு வாழ்க்கை திரும்புவதில் சுணக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Koratur ,Chennai ,
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...