×

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பார்வையாளர்களை நியமித்து பாஜக அறிவிப்பு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் முதலமைச்சர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிப்பதை அடுத்து, 3 மாநிலங்களுக்கும் பார்வையாளர்களை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தாவடே, சரோஜ் பாண்டே ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்திற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் லக்‌ஷ்மணன், ஆஷா லக்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கருக்கு அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனாவால், துஷ்யந்த் கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பார்வையாளர்களை நியமித்து பாஜக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajasthan ,Madhya Pradesh ,Chhattisgarh ,Jaipur ,
× RELATED டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும்...