×

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து!

உதகை: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கையாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செ.மீ. அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் நிலையில், பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22-ம் தேதி முதல் மலை ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. பாதை சரிசெய்யப்பட்டு இன்று முதல் மலை ரயில் சேவை தொடங்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Uthakai ,Hill train ,Utkai ,Utkai hill train ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது