×

புதுக்கோட்டை, திருமயத்தில் தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருமயம். டிச.8: திருமயம் தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திருமயம் வட்டத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில துணை செயலாளர் சிதம்பரம் காத்திருப்பு போராட்டத்தின் நோக்கம் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் பேசினார். வட்ட செயலர் சிவா வரவேற்றார். வட்டப் பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

போராட்டத்தில், பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியதை உடனே நிறைவேற்ற வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகை உடனே வழங்க வேண்டும். 24 மணி நேரப் பணியில் உள்ள கிராம உதவியாளர்களுக்கு கூலியாக சிறப்பு காலம் முறை ஊதியத்திலிருந்து தங்களை வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதிய டி பிரிவில் இணைக்க பல ஆண்டுகாலமாக வேண்டுவது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 15ம் தேதி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகளும், வருவாய் கிராம ஊழியர் சங்க உறுப்பினர் திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

The post புதுக்கோட்டை, திருமயத்தில் தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Revenue Employees Union ,Pudukottai, Tirumayat ,Thirumayam ,Tamil Nadu Revenue Village Employees Union ,Thirumayat, ,Pudukottai ,
× RELATED திருமயம் கோயில்களில் அமித்ஷா மனைவியுடன் சாமி தரிசனம்