×

கடையம் அருகே தனியார் பள்ளியில் திருடிய வாலிபர் கைது

கடையம்,டிச.8: கடையம் அருகே பாப்பான்குளத்தில் இருந்து செல்லபிள்ளையார்குளம் செல்லும் வழியில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அலுவலக அறையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடிய மர்ம நபர், பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்து சென்றார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை சீதா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் செல்லப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த காளிமுத்து மகன் சுரேஷ் என்ற சொக்கன் (21) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து பணம் மற்றும் ஹார்ட் டிஸ்கை மீட்டனர். கைதான சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post கடையம் அருகே தனியார் பள்ளியில் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Papankulam ,Chellappillaiyarkulam ,
× RELATED தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற...