×

‘மிக்ஜாம்’ புயலால் சென்னை கடும் பாதிப்பு; வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் குவிகிறது

சென்னை: ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை கடும் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது. மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வரலாறு காணாத வகையில் 73 செ.மீ அளவுக்கு கனமழை பெய்து உள்ளது. இதனால் 4 மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார்.

அமைச்சர்கள் இரவு பகலாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பணியை விரைவு படுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியிலும், அவர்களுக்கு ஆங்காங்கே தொய்வில்லாமல் உணவு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழல்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை விரைந்து இயல்பு நிலைக்கு கொண்டு வர பிற மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சென்னையில் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது.

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரிஇ கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ₹2 கோடி மதிப்பிலான அரிசி, பருப்பு, ரவை, சேமியா, சர்க்கரை, கோதுமை மாவு, எண்ணெய், துணிமணிகள், சோப்பு, பிஸ்கட், பால் பவுடர், ஹெல்த் டிரிங்இ, பிரெட், பாய், தலையணை, உணவு பொருட்கள், 60,000 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், சிகிச்சை ெபாருட்கள், நாப்கின், எண்ணெய், மளிகை பொருட்கள், பாத்திரம், தட்டு, பிரஷ், பேஸ்ட், குழந்தைகளுக்கான பொருட்கள் சென்னைக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளன.

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பிரெட், ரொட்டி, குடிநீர் பாட்டில்கள், அரிசி, போர்வைகள், துண்டுகள், வாளி மற்றும் பால்பவுடர், சேமியா பாக்கெட்டுகள், மைதா, நாப்கின் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், விருநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து ₹20 லட்சம் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர், பிஸ்கட், எண்ணெய், சீனி மற்றும் மளிகை பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டெல்டாவில் இருந்து ₹30 லட்சம் மதிப்பிலான உடைகள் மற்றும் உணவு பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பணிகள் குவிந்து வருகின்றன.

The post ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை கடும் பாதிப்பு; வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் குவிகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cyclone ,Miqjam ,Mikjam ,Mikjam' ,Dinakaran ,
× RELATED வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 18 வரை...