×

மளிகை கடைகளில் திருடிய பட்டதாரி உள்பட இருவர் கைது

 

பவானி,டிச.8: அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மனைவி பிரபாவதி (31). இவர், தனது வீட்டுக்கு அருகாமையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 28-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் பணம் ரூ. 5 ஆயிரத்தை திருடி சென்றனர்.இதேபோன்று, அதே பகுதியில் உள்ள ராகவன் மளிகை கடை மற்றும் சிங்கம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள மற்றொரு மளிகை கடைகளில் பூட்டை உடைத்து 4 சிப்பம் அரிசி மூட்டை மற்றும் மளிகை பொருட்கள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.

வேலூர் மாவட்டம், மால்பேட்டையைச் சேர்ந்த மைக்கண்ணன் (எ) பூபதி (40), திருவண்ணாமலை மாவட்டம், படவேடு, வேட்டகிரிபாளையம், கொள்ளைமேட்டைச் சேர்ந்த சேட்டு மகன் பாலாஜி (27) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பட்டதாரி வாலிபரான பாலாஜி தற்போது கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது காரில் பூபதி ஊர், ஊராகச் சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

The post மளிகை கடைகளில் திருடிய பட்டதாரி உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Bhupathi ,Prabhavathi ,Kothakkalmedu ,Ammapet ,
× RELATED அலங்காநல்லூர் அருகே புனித காணிக்கை அன்னை தேவாலய தேர் பவனி விழா