வேடசந்தூர், டிச. 8: வேடசந்தூர் அருகே கோவிலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூரில் சாலைகள் மற்றும் தெருக்களில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இவை பொதுமக்களை பார்த்து குரைப்பதுடன், விரட்டி சென்று கடித்து வருகின்றன.
குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சாலைகளில் தெரு நாய்களை பார்த்து விலகி செல்ல முற்படுகையில் டூவீலர்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் பின்னால் வரும் வாகனங்களில் அடிபட்டு காயமடையும் நிலை நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்களை கட்டுப்படுத்த சுநடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கோவிலூரில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் டூவீலர்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் நடந்து செல்வோரையும் தெருநாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post வேடசந்தூர் கோவிலூரில் அச்சுறுத்தும் தெரு நாய்கள்: கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.