×

மண்டபம் அருகே பஸ்- சரக்கு வாகனம் மோதல்: பக்தர்கள் உயிர் தப்பினர்

 

மண்டபம், டிச. 8: ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் குஐராத் மாநிலத்தை சேர்ந்த 42 பக்தர்கள் மதுரையில் தனியார் பஸ் பிடித்து கன்னியாகுமரியில் இருந்து வருகை தந்துள்ளனர். பஸ்சை திருமங்கலத்தை சேர்ந்த ஆனந்தன் (51) ஓட்டி வந்துள்ளார். இவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் நேற்று சாமி தரிசனம் முடித்த பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர்.

மண்டபம் அருகே வேதாளை சமத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே பிளாக் கல் ஏற்றி கொண்டு கமுதி பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (27) ஓட்டி வந்த சரக்கு வாகனமும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியது. இதில் சரக்கு வாகன டிரைவர் விக்னேஷ்வரன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர்.

பஸ்சில் வந்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி தப்பினர். தகவலறிந்து வந்த மண்டபம் எஸ்ஐ சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் விபத்தில் சிக்கிய பஸ், சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண்டபம் அருகே பஸ்- சரக்கு வாகனம் மோதல்: பக்தர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Rameswaram Ramanathasamy ,Kairat ,Madurai ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை