×

ஆரணி கொட்டும் மழையில் எம்பி, எம்எல்ஏக்கள் ஆய்வு சேதமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தரவேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை:  ஆரணி பேரூராட்சியில் எம்.பி, எம்எல்ஏக்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் ஆய்வு ெசய்தனர். அப்போது, சேதமடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் அவர்களிடம் வலியுறுத்தினர். ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு மழையால் பாதிக்கப்பட்ட தமிழ் காலனி, தெலுங்கு காலனி, சுப்பிரமணி நகர், வள்ளுவர்மேடு ஆகிய பகுதிகளில் நேற்று கொட்டும் மழையில் எம்பி, எம்எல்ஏக்கள்ஆய்வு செய்தனர்.  இதில், 1974ம் ஆண்டு கட்டிய 70க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டு வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்து எலும்பு கூடுகள் போல் காட்சியளிக்கிறது. இதை திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், கோட்டாட்சியர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்கள் அவர்களிடம் கூறுகையில், சேதமடைந்த தொகுப்பு வீடுகள் 1974ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த  வீடுகளை அகற்றி விட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும்’ என்றனர். இதைகேட்ட எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் விரைவில்  வீடுகள்  கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். மேலும், ஆரணி பிஞ்சலர் வீதியில் உள்ள நெசவாளர்கள் வீடுகளில் புகுந்த மழை நீரை பார்வையிட்டனர். அப்போது, நெசவாளர்கள் நெசவு இயந்திரத்திலும் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால், நெசவு தொழில் பாதிப்படைந்துள்ளது என நெசவாளர்கள் தெரிவித்தனர்.  ஆய்வின்போது ஆரணி திமுக பேரூர் செயலாளர் ஜி.பி.வெங்கடேசன், வக்கில் அன்புவாணன், முன்னாள் செயலாளர் கண்ணதாசன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன் காங்கிரஸ் நகர தலைவர் வக்கில் சுகுமார், மாவட்ட பொறுப்பாளர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  …

The post ஆரணி கொட்டும் மழையில் எம்பி, எம்எல்ஏக்கள் ஆய்வு சேதமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தரவேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Arani ,Poothukotta ,M. ,Purasi B ,MB ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...